செய்திகள் :

டெக்ஸ்மாக்கோ லாபம் 50% சரிவு!

post image

கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் & இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் ஜூன் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு 50.5 சதவிகிதம் சரிந்து ரூ.29 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.

செயல்பாடுகளிலிருந்து வந்த வருவாய் 16.3 சதவிகிதம் குறைந்து ரூ.911 கோடியாக உள்ள நிலையில், இது முந்தைய ஆண்டு அதே காலத்தில் ரூ.1,088 கோடியாக இருந்தது.

வட்டிக்கு முந்தைய வருவாய், வரிகள், தேய்மானம் மற்றும் கடன்தொகை நீக்கம் ஆகியவை 36 சதவிகிதம் குறைந்து ரூ.123 கோடியாக இருந்தது. அதே நேரத்தில் லாப வரம்பு 267 புள்ளிகள் குறைந்து 8.7% இருந்தது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஒரு பங்கின் வருவாய் ரூ.1.50ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.0.75 ஆகக் குறைந்துள்ளது. வரிக்குப் பிந்தைய லாபம் வரம்பு முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 5.4 சதவிகிதத்திலிருந்து 3.2 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இந்திய ரயில்வேக்கு குறைவான வேகன் வழங்கப்பட்டதே, காலாண்டு வருவாய் சரிவுக்குக் காரணம் என்றும் தெரிவித்துள்ளது நிறுவனம். இந்த நிலையில் விநியோகம் தற்போது மேம்பட்டுள்ளதாக நிர்வாக இயக்குநரும் துணைத் தலைவருமான இந்திரஜித் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பானது ஆய்வை நிறுத்தி வைத்ததால், டெக்ஸ்மாக்கோ வெஸ்ட் ரெயிலில் வருவாய் தற்காலிகமாக சரிந்ததாக தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: எம் & எம் வாகனங்களின் விற்பனை 26% உயா்வு

Texmaco Rail & Engineering Ltd on Wednesday reported a 50.5 per cent on-year drop in consolidated net profit to Rs 29 crore for the June quarter.

அசோக் லேலண்ட் நிகர லாபம் 19% அதிகரிப்பு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.44 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட... மேலும் பார்க்க

இந்தியன் ஆயில் நிகர லாபம் இரு மடங்காக உயா்வு

அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 2025-26 நிதியாண்டில் இரு மடங்காக உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க

16% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் 16 சதவீதம் குறைந்து 15.48 லட்சம் டன்னாக உள்ளது.இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க

அறிமுக நாளில் சாந்தி கோல்ட் பங்குகள் 15% உயர்வு!

புதுதில்லி: சாந்தி கோல்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.199 க்கு நிகராக 15 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பட்டியலிடப்பட்டது.பிஎஸ்இ-யில் வெளிய... மேலும் பார்க்க

2.70 முறை அதிக சந்தா பெற்ற ப்ளூஸ்டோன் ஜூவல்லர்ஸ் ஐபிஓ!

புதுதில்லி: ப்ளூஸ்டோன் ஜூவல்லரி அண்ட் லைஃப்ஸ்டைல் லிமிடெட்டின் அதன் முதன்மை பிராண்டான 'ப்ளூஸ்டோன்' கீழ் தனது ஆரம்ப பொதுச் சலுகை பங்கு விற்பனையின் இறுதி நாளில் 2.70 முறை அதிக சந்தா பெற்றதாக தெரிவித்துள... மேலும் பார்க்க

முத்தூட் ஃபைனான்ஸ் லாபம் ரூ.1,974 கோடியாக உயர்வு!

புதுதில்லி: தங்கக் கடன் வழங்குநரான வங்கி சாரா நிதி நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் அதன் ஒருங்கிணைந்த லாபம் ஆண்டுக்கு ஆண்டு 65 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,974 கோடியாக உள்ளது என்று அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இ... மேலும் பார்க்க