டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்...
வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்
வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை தடை செய்யக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தமிழக அரசு மூலம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் கடிதம் வழங்கவிருக்கிறார்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் அவர்கள், சுதந்திர தினமான இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொலைக்காட்சியின் அனைத்துக் குற்றப்பிரிவு செய்தியாளர்களையும் நேரடியாக சந்தித்து சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்ததோடு நலம் விசாரித்தார்.
பின்னர் குற்றப்பிரிவு செய்தியாளர்களின் பிறந்த நாள் அன்று நேரடியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அழைத்து வாழ்த்துகளை தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
பயங்கரமான ஆயுதங்கள் மூலமாக வன்முறையை தூண்டும் வகையிலும், குற்றங்களுக்கு வழிவகுக்கும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை தடுக்க கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு, தமிழக அரசு மூலமாக சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் கடிதம் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்படும் வன்முறையைத் தூண்டும் வகையிலான ரீல்ஸ்களை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் தனி குழுவாக சைபர் கிரைம் மூலம் கண்காணிக்கவும் வழிவகை செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.