டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்...
முதல்நாள் வசூலில் கூலியிடம் தோல்வியடைந்த வார்-2! ஸ்பை யுனிவர்ஸ் படங்களிலும் குறைவு!
ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் ஆகியோரின் நடிப்பில் வெளியான வார்-2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி மற்றும் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வார்-2 இரண்டு திரைப்படங்களும் சுதந்திர தினத்தையொட்டி வெளியாகின.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகர்ஜுனா, உபேந்திரா, ஆமிர் கான் உள்ளிட்டோர் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கூலி திரைப்படம் முதல்நாளில் ரூ.151 கோடி வசூலித்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கூலிக்குப் போட்டியாக வெளியான வார்-2 திரைப்படம் முதல்நாளில் இந்தியா முழுவதும் வெறும் ரூ.52.50 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புக் மை ஷோ வெளியிட்ட தரவுகளின்படி, கூலி திரைப்படம் முன்பதிவிலேயே 10 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகி, திரைத்துறையினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால், வார் - 2 திரைப்படத்திற்குப் பெரிய வரவேற்பும் ஆன்லைன் முன்பதிவும் நடைபெறவில்லை. இதனால், படக்குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். அது வசூலிலும் எதிரொலித்துள்ளது.
இரண்டு திரைப்படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியுள்ளது.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸின் மிகவும் வெற்றிகரமான படங்களான 'வார்' மற்றும் 'பதான்' படங்களின் தொடக்கநாள் வசூலைவிட வார் 2 திரைப்படம் குறைவான வசூலைப் பெற்று தயாரிப்பாளருக்கு அதிர்ச்சியளித்துள்ளது.