டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்...
பிபாஷா பாசுவை உருவ கேலி செய்தது ஏன்? மன்னிப்பு கேட்ட மிருணாள் தாக்குர்!
நடிகை பிபாஷா பாசு குறித்த தன்னுடைய மோசமான பேச்சுக்கு நடிகை மிருணாள் தாக்குர் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை மிருணாள் தாக்குர் பல ஆண்டுகளுக்கு முன்பாக தொலைக்காட்சியில் இருக்கும்போது பிபாஷா பாசு குறித்து ஆண் போல இருக்கிறார் என்று உடல் ரீதியாக கொச்சையாகப் பேசினார்.
இந்த விடியோ சமீபத்தில் டிரெண்டாகி மிருணாளை விமர்சிக்கவும் அவர் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அவரது ஸ்டோரியில் கூறியிருந்ததாவது:
பதின்ம வயதினராக நான் என் 19 வயதில் நிறைய மோசமான விஷயங்களைப் பேசியுள்ளேன். என்னுடைய வார்த்தையின் மதிப்பு தெரியாமல் எப்போதும் எதையாவது பேசி விடுகிறேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், அதில் ஒருவரை உருவகேலி செய்ய வேண்டும் என்ற எந்த விதமான உள்நோக்கத்திலும் செய்யவில்லை.
ஜாலியான அந்த நேர்காணலில் எல்லையை மீறிவிட்டது. ஆனால், அது எப்படி மாறிவிட்டது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். நிச்சயமாக நான் வேறுவிதமாகப் பேசியிருக்க வேண்டும்.
காலம் செல்ல செல்ல அழகு என்பது எந்தவிதத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பத அறிகிறேன். அதை மிகவும் மதிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.