செய்திகள் :

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் திமுக கூட்டணியை உடைக்க சிலர் முயற்சி: திருமாவளவன்

post image

தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையை முன்வைத்து திமுக கூட்டணியை உடைக்க சிலர் முயற்சிப்பதாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக பிரதமர் மோடி கூறியிருப்பது மகிழ்ச்சி. ஜிஎஸ்டி வரி குறைப்பு, தேர்தலுக்காகச் செய்தாலும் அது மக்களுக்குப் பயன்படும் என்றால் அதை வரவேற்கிறோம். ஜிஎஸ்டி வரியை முழுமையாகக் கைவிட வேண்டும்.

பிரதமர், தான் ஒரு ஆர்எஸ்எஸ் தயாரிப்பு என்பதை இன்றைய உரையின் மூலமாக நிரூபித்திருக்கிறார். சுதந்திர தின விழாவில் ஆர்எஸ்எஸ்ஸை பாராட்டியது ஏற்புடையது அல்ல. மத்திய அரசால் ஆர்எஸ்எஸ் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தைத்தான் நாடாளுமன்றத்தில் படிப்படியாக செயல்படுத்தி வருகிறார்கள் என்று சொல்லி இருக்கிறோம். அதனால்தான் மதத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் இன்று பதற்றம் இருக்கிறது, வன்முறைகள் வெடிக்கின்றன.

தூய்மைப் பணியாளர்கள் பிரச்சனையில் அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் குரல் கொடுத்திருக்கிறோம்.

மாநில, மத்திய அரசுத் துறைகள் தனியார்மயமாக்கப்படுவது தீவிரமடைந்து வருகிறது.

அரசுத் துறைகள் தனியார்மயமாகும் முயற்சியை கைவிட வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

தனியார்மயமாக்கும் முயற்சியை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மீண்டும் ஒரு முறை தமிழக அரசுக்கு வலியுறுத்துகிறேன்.

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்ப நடைமுறை. அவர்களுக்கு நீதி கிடைப்பதைவிட திமுக கூட்டணியை உடைப்பதே சிலரின் நோக்கம்.

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் 11 மண்டலங்களின் தூய்மைப் பணிகள் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் 4 மண்டலங்கள் உள்ளன. அதில் 2 மண்டலங்களை தனியார்மயமாக்க அரசு முடிவு எடுத்துள்ளது; இந்த முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று பேசியுள்ளார்.

VCK leader Thol. Thirumavalavan has said that some people are trying to break the DMK alliance by raising the issue of sanitation workers.

இதையும் படிக்க | இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி!

வன்முறையைத் தூண்டும் ரீல்ஸ்களுக்குத் தடை: இன்ஸ்டாகிராமுக்கு காவல் ஆணையர் அருண் கடிதம்

வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிடும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை தடை செய்யக்கோரி இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு தமிழக அரசு மூலம் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் கடிதம் வழங்கவிருக்கிறார்.சென்னை பெரு... மேலும் பார்க்க

ஆளுநர் தேநீர் விருந்து! திமுக, தவெக புறக்கணிப்பு; அதிமுக, பாஜக பங்கேற்பு!

சுதந்திர நாளையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு சென்னை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி தொடங்கியது.இந்த தேநீர் விருந்தில் அதிமுக சார்பில் இன்பதுரை, பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்யும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களை காபி - பேஸ்ட் செய்து புதுப்பெயர் சூட்டுகிறார் தமிழக முதல்வர் என்று, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டிருக்... மேலும் பார்க்க

தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!

சுதந்திர நாளையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வியாழக்கிழமையில் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தார். இருப்பினும், அவரது அழைப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் புறக்கணித்த நிலையில், திமுக கூ... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஒடிசா, ... மேலும் பார்க்க

கீழவைப்பாறு விண்ணேற்ற மாதா கோயில் தேரோட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் கீழவைப்பாறு கிராமத்தில் உள்ள மோட்ச ராக்கினி மாதா என்று அழைக்கப்படும் விண்ணேற்ற மாதா கோயிலின் நானூற்று அறுபத்தெட்டாவது (468) ஆண்டுத் திருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது. ஐநூறு ஆண... மேலும் பார்க்க