RN Ravi: "ஆளுநர் ரவிக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு?" - கனிமொழி எம்.பி கேள்வி
நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தனது பேச்சில் ஆளும் திமுக அரசின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.
அந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று, தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள், பெண் குழந்தைகளின் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரிப்பது கவலையளிக்கிறது. பாலியல் வன்கொடுமைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இதற்குப் பதில் அளித்து எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதில், "தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
எப்படி என்ன வெறுப்பு?
இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.… https://t.co/mGPRPytu6X
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 15, 2025