செய்திகள் :

மோடியின் சுதந்திர தின உரை: "தான் ஒரு RSS தயாரிப்பு என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்" - திருமா

post image

டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பிரதமர் மோடியின் கொடியேற்றத்துடன் இன்று நடைபெற்றது.

அப்போது பிரதமர் மோடி தனது உரையில், 1948, 1975-77, 1992 என மூன்று முறை மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைப் பாராட்டிப் பேசியிருந்தார்.

குறிப்பாக, "ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன்மயமான அத்தியாயம். ஸ்வயம் சேவகர்கள் நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

ஒரு வகையில், உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ். இது 100 ஆண்டுக்கால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது" என மோடி பெருமையாகப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், மோடியின் இத்தகைய பேச்சால் வி.சி.க தலைவரும் எம்.பி-யுமான திருமாவளவன் அவரை விமர்சித்திருக்கிறார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் தயாரிப்பு என்பதை அவர் மீண்டும் உறுதி செய்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் பாசறையில் வளர்ந்தவர்கள்தான் இன்று நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்தைத்தான் நிறைவேற்றி வருகிறார்கள்.

அதனால்தான் இன்றைக்கு நாடு முழுவதும் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் பதற்றம் நிலவுகிறது, வன்முறைகள் வெடிக்கின்றன.

ஆர்பாட்டத்தில் திருமாவளவன்
ஆர்பாட்டத்தில் திருமாவளவன்

ஆர்.எஸ்.எஸ்ஸை சுதந்திர தின விழாவில் அவர் பாராட்டியிருப்பது ஏற்புடையதல்ல.

அந்த இயக்கம் அரசு சாராத தொண்டு நிறுவனம் என்றாலும்கூட, இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கம். சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வெறுப்பு அரசியலைப் பரப்புகின்ற இயக்கம்.

சாதி அடிப்படையில் இந்துக்களை அணிதிரட்டுகின்ற இயக்கம். இந்து பெரும்பான்மைவாதம் என்கிற பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகின்ற இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தை, 140 கோடி மக்களுக்குமான பிரதமர் சுதந்திர விழாவில் பாராட்டிப் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

OPS: "தமிழ்நாடு புறவழிச் சாலைகளிலும் சுங்க கட்டணமா?" - திமுக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு

தமிழ்நாட்டு புறவழிச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்குச் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முடிவை எடுத்துள்ள தி.மு.க அரசை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்... மேலும் பார்க்க

RN Ravi: "ஆளுநர் ரவிக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு?" - கனிமொழி எம்.பி கேள்வி

நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி தனது பேச்சில் ஆளும் திமுக அரசின் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அந்தக் குற்றச்சாட்டுகளில் முக்கியமான ஒன்று, தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரி... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டிற்கு இதைக் கொண்டு வராமல், புதிய விமான நிலையங்கள் திறந்து என்ன பயன்?" - டி.ஆர்.பி. ராஜா

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிற்குக் கடிதம் எழுதியுள்ளார். அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்... "மத்திய விமானப் ப... மேலும் பார்க்க

தூய்மைப் பணி: "11 மண்டலங்களை தனியார்மயமாக்கியது அதிமுக; அதற்கு அதிமுகவின் பதில் என்ன?" - திருமா

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாக தனியார்மயமாதலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 13-ம் தேதி நள... மேலும் பார்க்க

புதுச்சேரி: "தனிநபர் வருமானம் ரூ. 3,02,680 லட்சமாக உயர்வு" - முதல்வர் ரங்கசாமி சுதந்திர தின உரை

நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாண்டிச்சேரி கடற்கரைச் சாலையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் முதல்வர் ரங்கசாமி.தொடர்ந்து பேசிய அவர், `... மேலும் பார்க்க

ஈரோடு: 79வது ஆண்டு சுதந்திர தினம் விழா; ஆயுதப்படை மைதானத்தில் கொண்டாட்டம் | Photo Album

ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர தினவிழா ஈரோடு சுதந்திர த... மேலும் பார்க்க