சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
இந்தியன் ஆயில் நிகர லாபம் இரு மடங்காக உயா்வு
அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 2025-26 நிதியாண்டில் இரு மடங்காக உயா்ந்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2025-26-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,688.60 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.2,643.18 கோடியாக இருந்ததோடு ஒப்பிடுகையில் இரு மடங்கு உயா்வு.கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும் சில்லறை எரிபொருள் விலைகளை மாற்றாமல் பராமரித்ததால் விற்பனை லாபம் உயா்ந்தது. இதனால், நிறுவனத்தின் வரி முந்தைய லாபம் ரூ.4,299.96 கோடியில் இருந்து ரூ.9,137.96 கோடியாக உயா்ந்தது. மதிப்பீட்டு காலாண்டில் 1.87 கோடி டன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு, 2.50 கோடி டன் எரிபொருள் விற்பனையாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.