செய்திகள் :

அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம்..! சர்ச்சையான பதிவு?

post image

நீலம் தயாரிப்பில் உருவாகியுள்ள தண்டகாரண்யம் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து நடிகர் முத்துகுமார் பதிவிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது.

இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம் எனும் படத்தை இயக்கியுள்ளார்.

இதில் கெத்து தினேஷ், கலையரசன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகர் இசையமைக்க, பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

சமீபத்தில் தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து நல்ல வரவேற்பை பெற்றது.

லப்பர் பந்து வெற்றிக்குப் பிறகு தினேஷின் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

இந்தப் படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமெனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சார்பட்டா பரம்பரை, மகான் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் முத்துக்குமார் இதனைப் பகிர்ந்து, “அமரன்கள் செய்த அநீதிகளை பேசும் தண்டகாரண்யம்” எனப் பதிவிட்டுள்ளார்.

Actor Muthukumar's post.
நடிகர் முத்துக்குமாரின் பதிவு.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தினை இயக்குநர் கோபி நயினார் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், நடிகர் முத்துக்குமார் அமரன் படத்தைக் குறிப்பிட்டு பதிவிட்டாரா அல்லது வேறு பொருளில் குறிப்பிட்டாரா என்ற விளக்கம் எதுவும் தரப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Actor Muthukumar's post sharing the poster of the film Dhandakaranyam, produced by Neelam, has attracted attention.

ஒரு குடும்பத்தில் பெண்/ஆண் குழந்தைகளே பிறப்பது அதிர்ஷ்டமா? அறிவியலா? ஹார்வர்டு பல்கலை ஆய்வு

உலகம் முழுவதும் பார்த்தால், ஒரு சில குடும்பங்களில் தொடர்ந்து ஆண் அல்லது பெண் குழந்தைகளே பிறப்பதில் வெறும் அதிர்ஷ்டமா அல்லது அறிவியலும் இருக்கிறதா என்பது குறித்து ஹார்வர்டு பல்கலை ஆய்வு செய்திருக்கிறது... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு வரும் ரொனால்டோ..! எஃப்சி கோவா உடன் மோதல்!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்தியாவின் எஃப்சி கோவா அணிக்கு எதிராக விளையாட இந்தியா வருவாரென எதிர்பார்க்கப்படுகிறது.ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட இந்திய கால்பந்து கிளப்பான மோகன் ... மேலும் பார்க்க

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் ரஜினி நடித்த கூலி படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரம் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்த... மேலும் பார்க்க

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

ரஜினியின் கூலி படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி விஜய்யின் முதல்நாள் வசூலை முறியடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் நே... மேலும் பார்க்க

தலைவன் தலைவி ஓடிடி ரிலீஸ் தேதி!

விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ... மேலும் பார்க்க

பவர்ஹவுஸ்... வைரலாகும் ரஜினியின் உடற்பயிற்சி விடியோ!

நடிகர் ரஜினி உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் நேற்று (ஆக.14) உலகம் முழுவதும் வெளியானது. கலவையான விமர்சனங்... மேலும் பார்க்க