தமிழர்கள் மீது வெறுப்பு? ஆளுநரா? பாஜக தலைவரா? கனிமொழி எம்.பி. ஆவேசம்!
காளிமுத்து மறைவு: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் இரங்கல்
சமூக வலைத்தளங்களில் திமுக கொள்கைகள் - சாதனைகளை இடைவிடாது எழுதி வந்த காளிமுத்து மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், கனிமொழி எம்.பி. ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லாவிட்டாலும், தனது கருப்பு சிவப்பு உணர்வால், இணையத்தில் கழகத்தின் முகங்களில் ஒருவராக அறியப்பட்டவரும், கழகமே தனது அடையாளம் எனச் செயல்பட்டவருமான அன்புத்தம்பி காளிமுத்து மறைந்த செய்தி என்னை மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது.
துடிப்புமிக்க இளம் உடன்பிறப்பான காளிமுத்தை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், திமுக குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
சமூக வலைத்தளங்களில் திமுக கொள்கைகள் - சாதனைகளை இடைவிடாது எழுதி வந்த அன்புத்தம்பி காளிமுத்து மறைந்தார் என்ற செய்திக் கேட்டு வருந்தினேன்.
இணையத்தில் கருத்துப் போரிட்ட கழகச்சிப்பாய் காளியின் கொள்கைப் பணி போற்றதலுக்குரியது. அவரைப்போன்ற தன்னலமற்ற கருப்பு - சிவப்பு தொண்டர்களே அன்றும், இன்றும் கழகத்தின் கேடயம்.
காளிமுத்தை இழந்து தவிக்கும் குடும்பத்தார் - நண்பர்கள் - உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் எனக் குறிப்பிட்டுள்ளார்.
கனிமொழி, எம்.பி. இரங்கல்
திமுக தீவிரப் பற்றாளர் காளிமுத்து மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
கட்சி கொள்கைகளைப் பற்றிக்கொண்டு ஆற்றல்மிக்க உடன்பிறப்பாக இணையத்தில் செயல்பட்டவர். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உடன்பிறப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கூறியுள்ளார்.