செய்திகள் :

புதுக்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆட்சியர்!

post image

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக,மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவுடன் திறந்த ஜீப்பில் காவல்துறையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்புப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் ஆட்சியர் மு. அருணா.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை சாந்தநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் கம்பன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்திலும் மேயர் செ.திலகவதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரித் தலைவர் குரு. தனசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளர் பிச்சப்பா மணிகண்டன் கொடியேற்றி வைத்தார். இயக்குநர் ம.பிச்சப்பா, செயலர் மு. விஸ்வநாதன், முதல்வர் குழ. முத்துராமு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒன்பது முக்கிய அறிவிப்புகள்!

District Collector M. Aruna hoisted the national flag at the Independence Day celebrations held at the Pudukkottai Armed Forces Ground on Friday.

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

தூய்மைப் பணியாளர்கள் நலன் காக்கும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.முதல்வர் மு.க.ஸ்டாலினை ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையிலிருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரை மேற்கொள்ளும் இருசக்கர... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டம் கோலாகலம்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.விழா நடைபெறும் மைதானத்துக்கு காலை 9 மணிக்கு வ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் விழா கோலாகலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் த... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு முக்கிய அறிவிப்புகள்!

சுதந்திர நாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியேற்றி வைத்து விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு திமுக அரசு செய்த திட்டங்களை ப... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் ஒரே நாளில் 1.78 லட்சம் பேர் பயணம்!

அரசுப் பேருந்துகளில் சென்னையில் இருந்து ஒரே நாளில் 1,78,860 பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சுதந்திர நாள் விடுமுறை மற்றும் வாரவிடுமுறை முன்னிட்டு,சென்னை மற்றும் ... மேலும் பார்க்க