செய்திகள் :

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு முக்கிய அறிவிப்புகள்!

post image

சுதந்திர நாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை கொத்தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தேசியக் கொடியேற்றி வைத்து விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு திமுக அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். தொடா்ந்து, விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு திமுக அரசு செய்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.

அப்போது,

விடுதலை வீரர்களை வணங்குகிறேன்

சுதந்திர நாளில் விடுதலை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரை வணங்குகிறேன். விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக விளங்கும் தியாகிகளை போற்றுவோம். அவர்களின் உன்ன நோக்கங்கள் நிறைவேற உறுதி எடுத்துக்கொள்வோம்.

சிலர் மட்டும் போராடி பெற்றது அல்ல சுதந்திரம்

சிலர் மட்டும் போராடி பெற்ற அல்ல இந்த விடுதலை சுதந்திரம் குமரி முதல் இமயம் வரை அனைத்துத் தரப்பு மக்களும், அனைத்து தேசிய இணை மக்களும், அனைத்து மொழி மக்களும், அனைத்து பிரிவு மக்களும், அனைத்து பன்பாட்டை பின்பற்றும் மக்களும் தங்களின் ரத்தத்தை சிந்தி பெற்றதுதான் இந்த சுதந்திர விடுதலை.

தேசியக் கொடி ஏற்றும் உரிமை

இன்று நாடு முழுவதும் உள்ள மாநில முதல்வர்களுக்கும் தேசியக் கெடியை ஏற்றி வைக்கும் ஜனநாயக உரிமையை 1974 ஆம் ஆண்டே பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி. அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என கருணாநிதி கனவு கண்டனர். தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி வழியில், ஐந்தாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை பெற்றமைக்கு நான் பெருமை அடைகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

தியாகிகளை தொடர்ந்து போற்றும் அரசு

1967 இல் திமுக ஆட்சிக்கு வரும் முன் தியாகிகளுக்காக 3 நினைவு மண்டபங்கள்தான் இருந்தன. தியாகிகளை தொடர்ந்து போற்றிவரும் அரசாக திராவிட மாடல் அரசு விளங்குகிறது. பெரும்பாலான தியாகிகளுக்கு மணிமண்டபம், சிலைகள் அமைக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள்

அனைவருக்குமான இந்தியாவாக நாடு இருக்க வேண்டும் என நமது தலைவர்கள் கனவு கண்டார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றுவது தான் அவர்களுக்கு செலுத்தும் உண்மையான புகழஞ்சலி. தியாகத்தில் போராட்டத்தில் சளைத்தவர்கள் அல்ல தமிழர்கள் என்பதை வரலாறு சொல்லும். அவர்களின் தியாகத்தை நினைவுக்கூறும் வகையில் சிலைகள் மணிமண்டபங்களை கட்டி எழுப்பியுள்ளோம்.

மாபெரும் உச்சத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி

கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை இலக்கத்தில் தமிழ்நாட்டின் வளர்ச்சி.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான அதிகாரம் மற்றும் நிதிப் பகிர்வில் மாநில அரசின் பங்கை மீட்டெடுத்திட அரசியல் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுதான் ஓரே தீர்வு.

இதை நிறைவேற்றி முடிப்பதற்கான நேரம் வந்துவிட்டது என இந்த விடுதலை சுதந்திர நாளில் உறுதியாக நம்புகிறேன்.

தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு

* மாநில அரசு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அரசு வழங்கும் மாதந்திர ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* தியாகிகளின் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்பட்டும் வரும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* கட்டபொம்மன் உள்ளிட்ட தியாகிகளின் வழித்தோன்றல் பெறும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற தமிழ்நாட்டின் வீரர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற வீரர்களின் கைம்பெண்களுக்காந மாதாதந்திர நிதி ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

* முன்னாள் படை வீரர்கள் வசதிக்காக சென்னை மாதவரத்தில் 33 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி அமைக்கப்படும்.

* மாற்றுத்திறனாளிகளுக்கு விடியல் பயணம் விரிவாக்கப்படும்.

ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்

* ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் பயிற்சி மையம் அமைக்கப்படும். மண்டல அளவில் 2 பயிற்சி மையங்கள், மாவட்டத்திற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு ‘தகைசால் தமிழா்’ விருது

தமிழ்நாட்டுக்கும், தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு வழங்கினார்.

கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

The state government will increase the monthly pension provided to freedom fighters to Rs. 22,000.

புதுக்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆட்சியர்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.முன்னதாக,மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் கு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் விழா கோலாகலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் த... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் ஒரே நாளில் 1.78 லட்சம் பேர் பயணம்!

அரசுப் பேருந்துகளில் சென்னையில் இருந்து ஒரே நாளில் 1,78,860 பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சுதந்திர நாள் விடுமுறை மற்றும் வாரவிடுமுறை முன்னிட்டு,சென்னை மற்றும் ... மேலும் பார்க்க

சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

நாட்டின் 79-ஆவது சுதந்திர நாளையொட்டி, நாட்டு மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டை... மேலும் பார்க்க

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையை ஏற்படுத்தும்: ராமதாஸ்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், தைல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?: தவெக தலைவர் விஜய் கண்டனம்

தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெ... மேலும் பார்க்க