"புதின் என்னை சந்திக்க இந்தியா தான் காரணம்" - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்தியா மீது 25 சதவிகித வரி மற்றும் அபராதத்தை அறிவித்திருந்தது அமெரிக்கா.
ஆனால், அடுத்தடுத்த நாள்களிலேயே, ரஷ்யா உடன் இந்தியா வணிகம் செய்கிறது என்று 25 சதவிகித வரி, 50 சதவிகித வரியாக உயர்த்தப்பட்டது.
ஒருவேளை, இன்று நடக்க உள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு வெற்றியடைந்தால், தானாக இந்தியா மீது போடப்பட்ட கூடுதல் வரி ரத்து ஆகுவிடும்.
ஆனால், என்ன நடக்க உள்ளது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புதின் ட்ரம்பை சந்திக்க காரணம் என்ன?
நேற்று ரேடியோ நிலையம் ஒன்றிற்கு பேட்டியளித்தார் ட்ரம்ப்.
அப்போது, புதின் ஏன் அவரை சந்திக்க ஒப்புக்கொண்டார் என்பது குறித்து பேசியுள்ளார்.
"நான் இந்தியா மீது கூடுதல் வரி விதித்ததால் தான், ரஷ்ய அதிபர் புதின் என்னை சந்திக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
எல்லா செயல்களுக்கு ஒரு விளைவு உண்டு.
நான் இந்தியா மீது கூடுதல் வரி விதித்தால், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருக்கும்.
உங்களுடைய இரண்டாவது பெரிய வாடிக்கையாளர் (இந்தியா) பின்வாங்கும்போது, உங்களது கையை விட்டு, முதல் பெரிய வாடிக்கையாளரும் (சீனா) போகலாம். அது தான் புதினை என்னை சந்திக்க வைத்திருக்கும்" என்று கூறியுள்ளார்.
Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4
வணக்கம்,
Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.
கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...