செய்திகள் :

ட்ரம்ப் - புதின் சந்திப்பு: "ஒருவேளை சக்சஸ் இல்லை என்றால்..." - ட்ரம்ப் பிளான் என்ன?

post image

இன்று அமெரிக்கா அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்யா அதிபர் புதின் சந்திக்க உள்ளனர்.

இந்தச் சந்திப்பின் முக்கிய அம்சமே, 'ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்' தான்.

புதின்
புதின்

புதின் என்ன சொல்கிறார்?

ட்ரம்ப் உடனான சந்திப்பு குறித்து நேற்று புதின், "என்னைப் பொறுத்தவரை, தற்போதைய அமெரிக்க அரசாங்கம் மிக ஆற்றலுடனும், நேர்மையாகவும் போர்களை நிறுத்தவும், நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டுவரவும், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரின் நலன்களுக்கு ஏற்ற ஒப்பந்தங்களை எட்டவும் முயற்சிகள் செய்து வருகிறது.

அமெரிக்கா நம் நாடுகளுக்கு இடையேவும், ஐரோப்பாவிலும், உலகத்திலும் நீண்ட கால அமைதிக்கான சூழலை உருவாக்க முயன்று வருகிறது.

அமெரிக்கா உடனான அடுத்தகட்ட சந்திப்புகளில், ஆயுதங்கள் சம்பந்தமான விஷயங்களில் ஒப்பந்தத்தை எட்டினால், அது பெரியளவிலான அமைதிக்கு வழி வகுக்கும்" என்று பேசியுள்ளார்.

ட்ரம்ப் கருத்து

நேற்று ரேடியோ பேட்டி ஒன்றில் பேசிய ட்ரம்ப், "இப்போது புதின் ஒப்பந்தம் மேற்கொள்வதற்குத் தயார் என்று நம்புகிறேன்.

புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான அடுத்தகட்ட சந்திப்பில் நான் இருப்பேன்.

இன்றைய சந்திப்பு இரண்டாவது சந்திப்பிற்கு வழிவகுக்கலாம். அந்த இரண்டாவது சந்திப்பு மிகவும் முக்கியமானது.

அந்தச் சந்திப்பில் நான், புதின், ஜெலன்ஸ்கி, சில ஐரோப்பியத் தலைவர்கள் இருக்கலாம். ஒருவேளை, ஐரோப்பியத் தலைவர்கள் இடம்பெறாமல் கூடப் போகலாம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

புதின் உடனான சந்திப்பிற்கு செய்தியாளர்கள் சந்திப்பு இருக்கும். அது இருவரும் இணைந்து தருவோமா என்பது தெரியவில்லை. இருவரும் இணைந்து செய்தியாளர் சந்திப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.

ஒருவேளை, இந்தச் சந்திப்பு வெற்றிபெறவில்லை என்றால், நான் மட்டும் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு, மீண்டும் வாஷிங்டன்னிற்குச் சென்றுவிடுவேன்" என்று கூறியுள்ளார்.

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

"புதின் என்னை சந்திக்க இந்தியா தான் காரணம்" - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்தியா மீது 25 சதவிகித வரி மற்றும் அபராதத்தை அறிவித்திருந்தது அமெரிக்கா. ஆனால், அடுத்தடுத்த நாள்களிலேயே, ரஷ்யா உடன் இந்தியா வணிகம் செய்கிறது என்று 25 சதவிகித வரி, 50 சதவி... மேலும் பார்க்க

ட்ரம்ப் - புதின் சந்திப்பு இந்தியாவுக்கு ஏன் இத்தனை முக்கியம்? - இனி என்ன நடக்கும்? | Explained

இன்று அமெரிக்க அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திக்க இருக்கிறார்கள். ட்ரம்பின் நீண்ட நாள் குறிக்கோள்களில் ஒன்று, 'ரஷ்ய - உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்' என்பது. அதற்கான விடை... மேலும் பார்க்க

'மீண்டும் தே.ஜ கூட்டணியில் ஓபிஎஸ்' - பாஜக வியூகம் கைகொடுக்குமா?

அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட பிறகு தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவைத் தொடங்கினார், ஓ.பி.எஸ். பா.ஜ.க தலைமையிலான தே.ஜ கூட்டணியில் இணைந்து செயல்பட்டார். ஆனால் அவருக்குக் கூட்டணியில் உரிய அங்கீகாரம் க... மேலும் பார்க்க

சுதந்திரதினம்: மும்பை இறைச்சிக் கடைக்குத் தடை; "சிவாஜி பருப்பு சாப்பிட்டுச் சண்டையிடவில்லை" - ராவுத்

மும்பை அருகில் உள்ள கல்யான்-டோம்பிவலி மாநகராட்சியில் சுதந்திரத்தினத்தன்று இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவி... மேலும் பார்க்க

79-வது சுதந்திர தினம்: சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்!தேசியக் கொடி தமிழக முதல்வர் ஸ்டாலின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார். அதைத்தொடர்ந்து உரையாற்றினார்.... மேலும் பார்க்க