செய்திகள் :

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம்: துணை முதல்வர் உதயநிதி

post image

நாட்டின் 79-ஆவது விடுதலைத் திருநாளை முன்னிட்டு ‘குறிஞ்சி’ இல்ல வளாகத்தில் நாட்டின் மூவர்ணக் கொடியை ஏற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

79 ஆவது சுதந்திர நாள் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வ மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றினார். இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மாநிலம் முழுவதும், மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில், ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம் - விடுதலைத் திருநாள் போற்றிடுவோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாட்டு மக்களுக்கு 79-ஆவது விடுதலைத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகம் - மதச்சார்பின்மை - சமத்துவம் - சகோதரத்துவம் - தன்னாட்சி அமைப்புகளின் சுதந்திரம் - வாக்குரிமை உட்பட நாட்டு விடுதலையின் அடித்தளங்களைப் பேணிக்காக்க இந்நாளில் உறுதியேற்போம்.

விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் - உயிர்நீத்த தியாகிகளை நினைவுகூர்வோம்.

ஆதிக்கத்தை எந்நாளும் எதிர்த்து நிற்போம் - விடுதலைத் திருநாள் போற்றிடுவோம்! என கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ஒன்பது முக்கிய அறிவிப்புகள்!

We will always stand against domination - let us celebrate Independence Day!" he said.

காளிமுத்து மறைவு: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் இரங்கல்

சமூக வலைத்தளங்களில் திமுக கொள்கைகள் - சாதனைகளை இடைவிடாது எழுதி வந்த காளிமுத்து மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், கனிமொழி எம்.பி. ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தமிழக முதல்வர் மு.க... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய அறிவிப்புகள்: தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி

தூய்மைப் பணியாளர்கள் நலன் காக்கும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டமைக்காக தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.முதல்வர் மு.க.ஸ்டாலினை ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனப் பேரணியை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையிலிருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரை மேற்கொள்ளும் இருசக்கர... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் சுதந்திர நாள் கொண்டாட்டம் கோலாகலம்!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.விழா நடைபெறும் மைதானத்துக்கு காலை 9 மணிக்கு வ... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் ஆட்சியர்!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.முன்னதாக,மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் கு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் விழா கோலாகலம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுதந்திர நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 79-ஆவது சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் த... மேலும் பார்க்க