மூவர் அரைசதம்: ஆஸி.யை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ மகளிரணி!
ஆஸ்திரேலியா ஏ மகளிரணியை 49.5ஆவது ஓவரில் வீழ்த்தி இந்தியா ஏ மகளிரணி தொடரைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய மகளிரணி 3 டி20 போட்டிகளில் 0-3 எனத் தோல்வியுற்றது. அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸி. அணி 265/9 ரன்கள் எடுத்தது.
இதில் அதிகபட்சமாக அலீஸா ஹீலி 91 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் மின்னு 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
அடுத்து விளையாடிய இந்திய அணி 49.5 ஓவரில் 266/8 ரன்கள் எடுத்து வென்றது.
இதில் அதிகபட்சமாக யஷ்டிகா 66, ராதா யாதவ் 60, தனுஜா 50 ரன்கள் அடித்து அசத்தினார்.
கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவையான நிலையில் முதல் பந்தில் தனுஜா 50 ரன்களில் இருக்கும்போது ஆட்டமிழந்தார்.
8 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி அடுத்து 0,1, 2, 1என 5 பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இத்துடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என வென்றது.