செய்திகள் :

சுதந்திர நாள்: நாட்டு மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

post image

நாட்டின் 79-ஆவது சுதந்திர நாளையொட்டி, நாட்டு மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைக்கிறாா். தொடா்ந்து, தமிழ்நாட்டுக்கும், தமிழின வளா்ச்சிக்கும் பங்காற்றியவா்களைப் பெருமைப்படுத்த ‘தகைசால் தமிழா்’ என்ற பெயரிலான விருதும், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கவுள்ளாா்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு முதல்வர் மு.க.ஸாட்லின் சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர நாள் வாழ்த்துகள். இந்த நாளில், ஜனநாயகம் நிறைந்த ஒரு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியை வலுப்படுத்துவோம்.

உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை பாதுகாத்தல் என்பதாகும். இதன் பொருள் நமது சுதந்திரப் போராளிகள் கற்பனை செய்த லட்சியங்களை நிலைநிறுத்துவதாகும், இதன் மூலம் ஒவ்வொரும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ முடியும் என கூறியுள்ளார்.

கோட்டை கொத்தளத்தில் இன்று தேசியக் கொடியேற்றுகிறாா் முதல்வா்

True freedom means rejecting bigotry, ending discrimination, and protecting the marginalised. It means upholding the ideals our freedom fighters envisioned, so that every person can live with equality, dignity, and respect.

அரசுப் பேருந்தில் ஒரே நாளில் 1.78 லட்சம் பேர் பயணம்!

அரசுப் பேருந்துகளில் சென்னையில் இருந்து ஒரே நாளில் 1,78,860 பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சுதந்திர நாள் விடுமுறை மற்றும் வாரவிடுமுறை முன்னிட்டு,சென்னை மற்றும் ... மேலும் பார்க்க

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையை ஏற்படுத்தும்: ராமதாஸ்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறும் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டம், தைல... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா?: தவெக தலைவர் விஜய் கண்டனம்

தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது செய்த திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இரவோடு இரவாக கைது!

ரிப்பன் மாளிகை அருகே 13 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு தவெக, விசிக கட்சி தலைவர்கள் கண... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில்... மேலும் பார்க்க

மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை: மேயர் பிரியா

சென்னை: நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல வேண்டும்; மாநகராட்சி வளாகம் போராட்டம் நடத்துவதற்கான இடம் இல்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகரா... மேலும் பார்க்க