செய்திகள் :

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: `RSS' - காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன?

post image

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பேசிய உரைகளில் நேற்று பேசிய உரைதான் (சுமார் 105 நிமிடங்கள்) நீளமானது. ஏற்கெனவே பா.ஜ.க-வுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் கருத்துவேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் கூட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் 75 வயதான தலைவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். இந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று மோடி 75-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார்.

ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ்

எனவே ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு பிரதமர் மோடியை குறிவைத்து பேசபட்டதாக சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சுதந்திர தின உரையில் வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஸை பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். அவரின் உரையில், ``இந்த அக்டோபரில் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும். கடந்த 100 ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவகர் (தன்னார்வலர்கள்) 'மாதா பூமி' (தாய்நாடு) நலனுக்காக 'வியாக்தி நிர்மாணம்' (நடத்தை மேம்பாடு) 'ராஷ்டிர நிர்மாணம்' (தேசக் கட்டுமானம்) ஆகியவற்றின் உறுதியை நிறைவேற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றனர்.

இந்த ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு பயணம் மிகவும் பெருமைமிக்க, புகழ்மிக்க பயணம்" என்றார். பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ``ஆர்.எஸ்.எஸ் பற்றி நாட்டு மக்களிடம் பேசுவது அரசியலமைப்பு, மதச்சார்பற்ற குடியரசின் உணர்வை அப்பட்டமாக மீறுவதாகும். அடுத்த மாதம் பிரதமரின் 75-வது பிறந்தநாள் வருகிறது. இந்த சூழலில் பிரதமரின் ஆர்.எஸ்.எஸ் குறித்த உரை அந்த அமைப்பை திருப்திப்படுத்துவதற்கான தீவிர முயற்சி. அவரின் இந்த உரை அந்த அமைப்புக்குள் இருக்கும் அதிகாரப் போராட்டத்தைக் குறிக்கிறது. பிரதமர் மோடியின் உரை பழைய, பாசாங்குத்தனமான, சலிப்பூட்டும் சுய பெருமை பேசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கலவையான சொற்கள்" என விவரித்தார்.

மாணிக்கம் தாகூர் எம்.பி

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ``பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, தன் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதைத் தடுக்கும் முயற்சியாக ஆர்.எஸ்.எஸ் பற்றிப் பேசியிருக்கிறார். அவரின் செயல் தியாகிகளின் நினைவையும் நமது சுதந்திர இயக்கத்தின் உணர்வையும் அவமதிக்கும் வகையிலானது. ஆர்.எஸ்.எஸ் காலனித்துவத்தை எதிர்த்து ஒருபோதும் நேரடிப் பங்காற்றவில்லை. ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற வெகுஜன போராட்டங்களில் இருந்து விலகி இருந்தது.

காங்கிரஸ் மற்றும் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவம் (INA) க்கு மாறாக RSS அச்சுறுத்தலாக கருதப்பட்டது. 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கூட, RSS தலைவர் கோல்வால்கர் உறுப்பினர்களுக்கு அந்த இயக்கத்தில் பங்குகொள்வதை தவிர்க்க அறிவுறுத்தினார். RSS-ன் மரபு காலனித்துவத்தை எதிர்த்துப் போராடுவது அல்ல - மாறாக சக இந்தியர்களிடையே வெறுப்பு மற்றும் பிரிவினையைப் பரப்புவதாகும். இந்த வெறுப்பு சித்தாந்தம்தான் மகாத்மா காந்தியை நம்மிடமிருந்து பறித்தது." என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட்

காங்கிரஸ் தலைவரும் தேசிய செய்தித் தொடர்பாளருமான சுப்ரியா ஷ்ரினேட், ``இந்தியாவை மறுவடிவமைக்க வேண்டும் என்ற RSS 'சித்தாந்த சதி' குறித்து சோனியா வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதற்கிடையில், சர்தார் வல்லபாய் படேல் தானே RSS ஐ தடை செய்தார். இன்று சுதந்திர தினத்தன்று... பிரதமர் மோடி மட்டுமே இப்படிப் பேசுவார். RSS நாட்டில் வெறுப்பைப் பரப்புகிறது. சுதந்திரப் போராளிகள் பற்றிய பேச்சுக்கள் செங்கோட்டையில் இருந்து பேசப்பட்டிருக்க வேண்டும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

RSS:``மோடியின் நடவடிக்கை வரலாற்றை மறுக்கும் செயலா..." - கண்டனங்களை பதிவு செய்த கேரள முதல்வர்!

இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பேசிய உரைகளில் நேற்று பேசிய உரைதான் (... மேலும் பார்க்க

Trump: "புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்..." - அமைதிக்கு அமெரிக்கா காட்டும் வழி என்ன?

ஆகஸ்ட் 14ம் தேதி ரஷ்ய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் மற்றும் நேட்டோ தலைவர்களை அழைத்து, ரஷ்யா போர் நிறுத்தத்தை விரும்பவில்லை என்றும் விரிவான ஒப்பந்தத்துக்கு தய... மேலும் பார்க்க

அலாஸ்கா சந்திப்பு: சாதித்த புதின்; ட்ரம்ப் நினைத்தது நடந்ததா? விரைவில் போர் நிறுத்தமா?|Explained

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷ்ய அதிபர் புதின் சந்திப்பு 'ஒருவழியாக' முடிந்துவிட்டது. 'நல்லபடியாக' என்று சொல்லாமல், ஒருவழியாக என்று சொல்வதற்கு காரணம் உண்டு. விட்டுக்கொடுக்காத புதின் 2022-ம் ஆண்டு பிப்ரவ... மேலும் பார்க்க

"RSS ஒருபோதும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை" - மோடியை விமர்சித்த கனிமொழி

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் புகழ்ந்து பேசியதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன."ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன்மயமான ... மேலும் பார்க்க

MK Stalin: "அமெரிக்கா வரியால், 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்" - பிரதமருக்கு அவசர கடிதம்!

அமெரிக்க அதிபர் இந்தியா மீது விதித்துள்ள 50% வரியினால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்றும், இதனை சமாளிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி ... மேலும் பார்க்க

PMK: "வணக்கம் என்றார்; நானும் வணக்கம் என்றேன்"- அன்புமணியுடன் சமாதானமா என்ற கேள்விக்கு ராமதாஸ் பதில்

தைலாபுரத்தில் இன்று ( ஆகஸ்ட்16) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.அப்போது, "பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாகச் சில விஷமிகள் வதந்தி பரப்புவதாகச் செய்திகள் வருகின்றன.நாளை ... மேலும் பார்க்க