பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: `RSS' - காங்கிரஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டுக...
PMK: "வணக்கம் என்றார்; நானும் வணக்கம் என்றேன்"- அன்புமணியுடன் சமாதானமா என்ற கேள்விக்கு ராமதாஸ் பதில்
தைலாபுரத்தில் இன்று ( ஆகஸ்ட்16) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது, "பொதுக்குழு ரத்து செய்யப்படுவதாகச் சில விஷமிகள் வதந்தி பரப்புவதாகச் செய்திகள் வருகின்றன.
நாளை சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

முக்கியமான பல தீர்மானங்களை நிறைவேற்ற இருக்கிறோம். தவறாமல் பொதுக்குழு உறுப்பினர்கள் வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஊடக நண்பர்களும் கட்டாயம் வர வேண்டும். பொதுக்குழுவில் குறைந்தது 4 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "அன்புமணி தன்னிடம் ஆர்சிவாதம் வாங்கவில்லை. அது பொய். வணக்கம் என்றார். நானும் வணக்கம் என்றேன். அதைத் தவிர வேறெதுவும் பேசவில்லை.

அன்புமணியுடன் சமாதானம் ஏற்பட்டதாகக் கூறுவது பொய்" என்று கூறியிருக்கிறார்.
தைலாபுரம் இல்லத்தில் தனது அம்மாவின் பிறந்தநாள் விழாவில் பாமக தலைவர் அன்புமணி கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.