யார் இந்த ரச்சிதா ராம்?
கூலி திரைப்படத்தில் நடித்து கவனம் பெற்றுள்ளார் நடிகை ரச்சிதா ராம்.
லோகேஷ் - ரஜினி கூட்டணியில் வெளியான கூலி திரைப்படம் கதை, திரைக்கதையால் ரசிகர்களிடம் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மேலும், பல லாஜிக் பிரச்னைகள் இருப்பதால் இப்படத்தைக் கேலி செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.
இருந்தும், இப்படத்தில் நடிகர்கள் சௌபின் சாகிர் மற்றும் ரச்சிதா ராமின் நடிப்பு கவனம் பெற்றுள்ளது.
கன்னட திரைத்துறையைச் சேர்ந்தவரான ரச்சிதா ராம் ஆரம்பத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பின் 2013 ஆம் ஆண்டு வெளியான புல்புல் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை வென்றார்.
20 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கன்னட ரசிகர்களிடம் கவனம் பெற்றவர், ஐ லவ் யூ படத்தில் நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இன்ஸ்டாகிராமில் அதிக பின் தொடர்பாளர்களை வைத்திருக்கும் கன்னட நடிகைகளில் ஒருவர்.

தற்போது, கூலி திரைப்படத்தில் கல்யாணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளார். மேலும், ரச்சிதாவின் நடிப்பில் 5 திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. கூலியால் இனி தமிழ்ப் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘நந்தினி’ தொடரின் நாயகி நித்யா ராம் இவரின் உடன்பிறந்த சகோதிரி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ்!