Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
விருது வாங்கியவருடன்.. தடபுடல் விருந்துடன் இட்லி கடை!
நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை படத்தில் நடிகர் பார்த்திபனும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில்,
இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த ‘ சூதாடி’ இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக ‘ இட்லி கடை’யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது.
இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் (மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன் இட்லி கடையில் . அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களைத் தொடர்ந்து இட்லி கடை என்ற படத்தையும் தற்போது இயக்கி வருகிறார். தானே இயக்கி நடிக்கும் தனுஷின் இட்லி கடை படத்தில் ராஜ்கிரண், நித்யா மெனன், அருண் விஜய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.