செய்திகள் :

ஆடிக் கிருத்திகை: சுவாமிமலை முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

post image

கும்பகோணம்: ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் முருகக்கடவுளின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது.

இங்கு 60 தமிழ் வருட தேவதைகளும் - 60 படி கட்டுகளாக இருந்து இங்கு வரும் முருக பக்தர்களுக்கு சேவை செய்வதாக ஐதீகம்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.

மூலவருக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தங்க கவசம் மற்றும் வைரவேலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உற்சவர் ஆறுமுக கடவுளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனைகள் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வந்து முருக கடவுளை தரிசனம் செய்து வருகின்றனர்.

மகத்தான மாற்றத்திற்கு வித்திட்ட நந்தன்... சசிகுமார் நெகிழ்ச்சி!

நந்தன் திரைப்படத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்தில் மகத்தான மாற்றம் நிகழ்ந்ததாக நடிகர் சசிகுமார் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். சசிகுமார் நடிப்பில் இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கிய படம்தான் நந்தன். இ... மேலும் பார்க்க

விருது வாங்கியவருடன்.. தடபுடல் விருந்துடன் இட்லி கடை!

நடிகர் தனுஷ் இயக்கி, நடிக்கும் இட்லி கடை படத்தில் நடிகர் பார்த்திபனும் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.இதுகுறித்து பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில்,இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய ‘ஆடுகளத்தி... மேலும் பார்க்க

கொண்டாட்டமும் கண்ணீரும்... கார் விபத்தில் உயிரிழந்த ஜோடாவிற்கு சாலா மரியாதை!

கார் விபத்தில் மறைந்த லிவர்பூல் வீரர் தியாகோ ஜோடாவுக்கு முகமது சாலா மரியாதை செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. சமீபத்தில் ஸ்பெயினின் ஜமோரா நகரில் நடந்த கார் விபத்தில் போர்ச்சுகல் கால்ப... மேலும் பார்க்க

பிரீமியர் லீக்கில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய முகமது சாலா!

பிரீமியர் லீக்கில் லிவர்பூல் எஃப்சியின் வீரர் முகமது சாலா வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளார். இங்கிலாந்தின் புகழ்வாய்ந்த பிரீமியர் லீக் போட்டிகள் இன்று (ஆக.16) அதிகாலை முதல் தொடங்கின. இதில் முதல் போட்... மேலும் பார்க்க

தடகளம்: தங்கத்துடன் அங்கிதா தேசிய சாதனை

இஸ்ரேலில் நடைபெற்ற சா்வதேச தடகள போட்டியில் இந்தியாவின் அங்கிதா தியானி, மகளிருக்கான 2,000 மீட்டா் ஸ்டீபிள்சேஸில் தங்கப்பதக்கம் வென்றாா். அத்துடன், புதிய தேசிய சாதனையும் அவா் படைத்தாா்.உலக தடகள அமைப்பின... மேலும் பார்க்க

கௌஃபுடன் மோதுகிறாா் பாலினி

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில், மகளிா் ஒற்றையா் காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ கௌஃப் - இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோா் மோதுகின்றனா். முன்னதாக ரவுண்ட் ஆஃப் 16-இ... மேலும் பார்க்க