Trump: "புதின் போர் நிறுத்தத்தை விரும்பவில்லை, ஆனால்..." - அமைதிக்கு அமெரிக்கா க...
எந்த பயமுறுத்தலும் எங்களை அச்சுறுத்த முடியாது! - ரெய்டு குறித்து கனிமொழி
எந்த பயமுறுத்தலும் எங்களுடைய கட்சித் தோழர்களையும் தலைவர்களையும் அச்சுறுத்த முடியாது என திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
சட்டவிரோத பணமோசடி தொடர்பாக, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை பசுமைவழி சாலையில் உள்ள வீடு, திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில் உள்ள வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர் பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது குறித்த கேள்விக்கு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பதில் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தேர்தல் ஆணையத்தை தன் கையில் வைத்துக்கொண்டு பிகாரில் சிறப்பு தீவிர திருத்தம் போன்றவற்றை ஜனநாயகத்தின் மீது ஏவிவிட்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதேநேரத்தில் திமுகவில் மூத்த அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளின் மூலமாக கணைகளைத் தொடுக்கின்றனர். இந்த அமைப்புகளை எதிர்க்கட்சிகள் மீதான தாக்குதலுக்கு ஆயுதமாக, கருவியாக மாற்றிவைத்துள்ளனர். அப்படிப்பட்ட ஒன்றுதான் இன்று நடைபெறும் ரெய்டுகள். திமுக இதனை எதிர்கொள்ளும்.
அமைச்சர் பெரியசாமி எத்தனையோ சிக்கல்களை எதிர்கொண்டு கட்சியோடு உறுதியாக நிற்கக்கூடிய ஒருவர். எந்த பயமுறுத்தலும் எங்களுடைய கட்சித் தோழர்களை, தலைவர்களை அச்சுறுத்த முடியாது" என்று கூறினார்.
DMK MP Kanimozhi responds to ED raid on Minister Periyasamys house
இதையும் படிக்க | அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன், மகள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை