`ஆன்மிக விஷயத்திலும், யோகாவிலும் கவனம் செலுத்துகிறார்; இது அவரது...'- ரஜினியை வா...
Mrunal: 'நான் பேசுனது தப்புதான்'- சக நடிகையை உருவகேலி செய்ததற்கு வருத்தம் தெரிவித்த மிருணாள் தாகூர்
நடிகை பிபாஷா பாசு குறித்து மிருணாள் தாகூர் பேசிய வீடியோ சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் மிருணாள் தாகூர் அது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.
'சீதா ராமம்’ படம் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாகூர்.
இந்தப் படத்தின் வெற்றி அடுத்தடுத்தப் படவாய்ப்புகளை உருவாக்கித் தர, தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த மிருணாள் தாகூர் ஆரம்ப காலத்தில் பல பேட்டிகளை அளித்திருக்கிறார்.
அந்த சமயத்தில் ஒரு தடவை நடிகை பிபாஷா பாசு குறித்து பேசியிருக்கிறார். அதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
அதாவது பிபாஷா பாசு பார்ப்பதற்கு ஆண் போல் இருப்பதாகப் பொருள்படுவதைப் போன்று மிருணாள் தாகூர் பேசியிருக்கிறார்.
நடிகை பிபாஷா பாசுவை உருவ கேலி செய்து மிருணாள் தாகூர் பேசியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தற்போது அவள் விளக்கம் அளித்திருக்கிறார்.

அதில், "டீனேஜ் பெண்ணாக எனது 19 வயதில் சில சமயங்களில் முட்டாள்தனமாக பேசி இருக்கிறேன்.
நான் பேசும் விஷயங்கள் எந்தளவுக்கு ஒருவரை காயப்படுத்தும் என்பதை அப்போது நான் புரிந்திருக்கவில்லை.
ஒருவரை உருவ கேலி செய்ய வேண்டும் என்பது எனது நோக்கம் கிடையாது. நான் விளையாட்டிற்கு கூட அப்படி பேசியிருக்க கூடாது. நான் விவரம் தெரியாமல் அப்படி பேசியிருக்க கூடாது.
அது தவறுதான். அந்த வயதில் தெரியாமல் பேசி விட்டேன்" என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...