Rashmika Mandana: "நாம எல்லாரும் சந்தித்து ரொம்ப நாள் ஆச்சு" - கீதா கோவிந்தம் படம் குறித்து ரஷ்மிகா
கன்னடத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா, பிறகு தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். 2018-ம் ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா முதல்முறையாக ஜோடி சேர்ந்தனர்.
அவர்களது லவ் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க்கவுட்டான நிலையில், ரசிகர்களும் இந்த ஜோடியை வரவேற்று மகிழ்ந்தனர். 2019-ல் வெளியான ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் மீண்டும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்தனர். அப்போது முதல் அவர்களைப் பற்றிய வதந்திகள் பரவிவருகின்றன. இந்த நிலையில், நடிகை ரஷ்மிகா மந்தனா தன் எக்ஸ் பக்கத்தில் கீதா கோவிந்தம் படம் குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.
அதில் அவர், ``7 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த படங்கள் எல்லாம் என்கிட்ட இருக்குன்னு நம்பவே முடியல. கீதா கோவிந்தம் எனக்கு எப்பவும் ரொம்ப ஸ்பெஷல் படமா இருக்கும். இந்தப் படத்தோட மேக்கிங்ல ஈடுபட்ட எல்லாரையும் நான் நினைச்சுட்டு இருந்தேன், நாம எல்லாரும் சந்திச்சு ரொம்ப நாள் ஆச்சு.. ஆனா அவங்க எல்லோரும் சூப்பரா, நல்லா இருப்பாங்கன்னு நம்புறேன். கீதா கோவிந்தம் வெளியாகி 7 வருஷம் ஆகுதுன்னு நம்பவே முடியல... 7 வருஷம் கீதா கோவிந்தம்" எனப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...