பட்டங்கள் மட்டுமல்ல… இதயங்களும் பறந்தன! - 4th International Kite Festival in நம்...
"RSS ஒருபோதும் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை" - மோடியை விமர்சித்த கனிமொழி
பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் புகழ்ந்து பேசியதற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
"ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன்மயமான அத்தியாயம். ஸ்வயம் சேவகர்கள் நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். ஒரு வகையில், உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ். இது 100 ஆண்டுக்கால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது" என்றார் மோடி.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் தயாரிப்பு என்பதை அவர் மீண்டும் உறுதி செய்திருக்கிறார். நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்தைத்தான் நிறைவேற்றி வருகிறார்கள். அதனால்தான் இன்றைக்கு நாடு முழுவதும் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் பதற்றம் நிலவுகிறது, வன்முறைகள் வெடிக்கின்றன." எனப் பேசியிருந்தார்.
காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர், "இருந்தும் பிரதமர் மோடி, 2025-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி தனது ஓய்வில் இருந்து தப்பிக்க ஆர்.எஸ்.எஸ்க்காக இதை பேசியுள்ளார்." என விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் திமுக எம்.பி கனிமொழி, "RSS இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒருபோதும் பங்கேற்கவில்லை. இன்று அதைப் புகழ்ந்து பேசுவது, பொய்களால் வரலாற்றை மறுவரைவு செய்யும் ஒரு தீவிர முயற்சியே—பாஜக நீண்ட காலமாக பயன்படுத்தி வரும் ஒரு தந்திரம், பாடநூல்களைத் திரித்து, நாடாளுமன்ற மனுக்களில் உண்மைகளைத் திருப்பிப் போடுவதன் மூலமும் இதையே செய்ய நினைக்கின்றனர்." என தனது சமூக வலைத்தள பக்கங்களில் விமர்சித்துள்ளார்.