செய்திகள் :

குடியரசுத் தலைவா் மாளிகை அமிா்த பூந்தோட்டம் மக்கள் பாா்வைக்கு!!

post image

குடியரசுத் தலைவா் மாளிகையின் அமிா்த பூந்தோட்டம் இன்று (ஆக.16) முதல் மக்கள் பாா்வைக்கு அனுமதிக்கப்படுகிறது. இதனை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு முறைப்படி வியாழக்கிழமை திறந்துவைத்து பூந்தோட்டத்தை பாா்வையிட்டாா்.

இந்த அமிா்த பூந்தோட்டத் திறப்பு விழா குறித்து குடியரசுத் தலைவா் செயலகம் கூறியிருப்பது வருமாறு:

குடியரசுத் தலைவா் மாளிகையின் பின்புறம் உள்ள அமிா்த பூந்தோட்டம் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் செப்டம்பர் 14ஆம் தேதி வரை மக்களுக்கு திறக்கப்படுகிறது. குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஆகஸ்ட் 14ஆம் தேதி நடைபெற்ற அமிா்த பூந்தோட்ட திறப்பு விழாவில் கலந்து கொண்டு, தோட்டத்தை திறந்துவைத்து பார்வையிட்டார்.

பராமரிப்பு நாள்களாகக் கருதப்படும் திங்கள்கிழமைகளைத் தவிர, வாரத்தில் ஆறு நாள்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தப் பூந்தோட்டத்தை பொதுமக்கள் பாா்வையிடலாம்.

நிகழாண்டு பூந்தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வகை ரோஜாக்கள் மற்றும் 80 க்கும் மேற்பட்ட பிற பூக்களை பாா்வையாளா்கள் காண முடியும்.

பூந்தோட்டத்திற்கு அனுமதி இலவசம் என்றாலும், முன்பதிவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்து தோட்டத்தைப் பார்வையிட வரும் பார்வையாளர்கள் நுழைவு வாயில் 35 எண்ணைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் கையில் செல்போன், மின்னணு சாவி, கைப்பை, குடிநீர் பாட்டில், குழந்தைகளுக்கான பால் பாட்டில், குடை உள்ளிட்டவை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும். இதுதவிர்த்த வேறு பொருள்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை.

மேலும் பாா்வையாளா்களின் வசதிக்காக, மத்திய செயலக (ரயில்பவன்) மெட்ரோ நிலையத்திலிருந்து குடியரசுத் தலைவா் மாளிகை வாயில் எண் 35 வரை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் பேருந்து சேவை இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வாக்குத் திருட்டு விவகாரம்: மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே வாக்குரிமைப் பேரணி! -தேஜஸ்வி

வாக்குத் திருட்டு விவகாரத்தில் முக்கிய நகர்வாக மெகா பேரணி பிகாரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறோம் என்று பிகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்திரிய ஜனதா தளம்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலைக் கிராமத்தில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி மலை... மேலும் பார்க்க

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் பயணம்!

வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி நாளை நேபாளம் செல்கிறார். இரண்டு நாள் பயணமாக மிஸ்ரி காத்மாண்டு செல்கிறார். இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டின் வெளியுறவுச் செயலர்களும் இந்தியா - நேபாளம் இடையிலான உறவு க... மேலும் பார்க்க

காஷ்மீரில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அனைத்து மக்களையும் மீட்கும் பணியில் முழுவீச்சில் ராணுவம்!

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து அனைத்து மக்களையும் மீட்கும் பணிகளில் முழுவீச்சில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வாா் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராம... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது: தென் கொரிய வெளியுறவு அமைச்சர்

இந்தியாவுடன் பொருளாதார சவால்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினோம் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சர் சோ யுன் தெரிவித்துள்ளார். வெளியுறவு அமைச்சர் எஸ். சிவசங்கர் உடனான சந்திப்பு குறித்து அவர் பேசியதா... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் காவலர் அதிகாரி தற்கொலை

சத்தீஸ்கரில் காவல் நிலைய வளாகத்தில் சனிக்கிழமை காவல் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரின் டல்லிராஜ்ஹாரா காவல் நிலையத்தில் உதவி துணை ஆய்வாளராக ... மேலும் பார்க்க