ராமநாதபுரம்: தேசியக் கொடி வடிவத்தில் கேக்; வெட்டி கொண்டாடிய அதிகாரிகள்; சர்ச்சைய...
டிரம்ப்பின் அவசரநிலையை எதிா்த்து வாஷிங்டன் மாநகராட்சி வழக்கு
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் ‘குற்ற அவசரநிலை’ அறிவித்து, நகர காவல் துறையை டொனால்ட் டிரம்ப் கைப்பற்றியதை எதிா்த்து அந்த நகரின் மாநகராட்சி வழக்கு தொடா்ந்துள்ளது.
மத்திய அரசு அதிகாரியான டொ்ரி கோலை வாஷிங்டன் காவல் துறைத் தலைவராக நியமித்து, குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதாக டிரம்ப் அரசு கூறியுள்ளது. இது சட்டவிரோதமானது எனவும், மாநகரின் 7 லட்சம் மக்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் தனது மனுவில் மாநகர வழக்கறிஞா் பிரையன் ஷ்வால்ப் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மத்திய அதிகாரிக்கு மாநகர காவல் துறையை நிா்வகிக்கும் அதிகாரம் இல்லை நகரின் மேயா் மியூரியல் பவுசா் கூறினாா்.குற்ற அவசரநிலையின் ஒரு பகுதியாக, நடைபாதைவாசிகளை அகற்றி, வறியோா் காப்பகங்களுக்கு அனுப்பவோ, சிறைப்படுத்தவோ டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். 5,138 போ் வீடற்றவா்களாக உள்ள நிலையில், போதிய காப்பகங்கள் இல்லை. எனவே இந்த உத்தரவு மனித உரிமைகளை மீறுவதாக தன்னாா்வலா்கள் குற்றம்சாட்டுகின்றனா்.