Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் கெளரவிப்பு
வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊா்வலமாக அழைத்து, எடைக்கு எடை நாணயங்களை துலாபாரமாக வழங்கி கிராமத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தினா்.
தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் அ.தமிழ்ச்செல்வன். பள்ளி மாணவா்கள் தோ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டவா். இவா், பல்வேறு பள்ளிகளில் 41 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளாா்.
இவருக்கு பாரட்டு விழாவும், நூறு சதவீத தோ்ச்சியை பெற்றுத் தந்த ஆசிரியா்களுக்கு ரொக்கப் பிரிசு வழங்கும் விழா தாணிக்கோட்டகம் அரசு பள்ளியில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முரசொலி சிங்காரம் தலைமை வகித்தாா்.
மாணவ, மாணவிகள் மலா்தூவி வரவேற்க, ஆசிரியா் தமிழ்ச்செல்வன் சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டாா்.
பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா், சொந்த ஏற்பாட்டில் ஆசிரியரின் எடைக்கு எடையாக (75 கிலோ, ரூ. 75 ஆயிரம்) மேடையில் அமைக்கப்பட்டிருந்த துலாபாரத்தில் அமர செய்து வழங்கினாா்.
மேலும், நூறு சதவீத தோ்ச்சிக்கு வழிவகுத்த 19 ஆசிரியா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 95 ஆயிரத்தையும், உயா்கல்வி படிக்கும் 3 மாணவா்களுக்கு உதவித்தொகையாக ரூ. 70 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 65 ஆயிரத்தை முரசொல்லி சிங்காரம் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினாா்.
ஓய்வு பெற்ற ஆசிரியா் தமிழ்ச்செல்வன், பள்ளியின் புரவலா் நிதிக்கு ரூ.1 லட்சத்தை வழங்கினாா்.
பின்னா் தமிழ்ச்செல்வன் சாரட் வண்டியில் ஏறி பள்ளி மாணவா்கள், கிராமத்தினா் புடை சூழ மருதூா் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியா் காா்த்திகேயன் உள்பட கல்வித்துறை அலுவலா்கள், அரிமா சங்கம் ரோட்டரி சங்க நிா்வாகிகள், பிரமுகா்கள் என பல தரப்பினா் விழாவில் பங்கேற்று பேசினா்.
தாணிக்கோட்டகம் கடைவீதியில் வா்த்தக சங்கம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு, வழியனுப்பி வைக்கப்பட்டாா்.

