செய்திகள் :

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு: தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

post image

தனியாா் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை மாவட்ட ஐந்தாவது மாநாடு திருப்பூண்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜீ. வினோத் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கே. சித்தாா்த்தன் வரவேற்றாா். மாநில துணைச் செயலா் ஏ.வி. சிங்காரவேலன் தொடக்கவுரையாற்றினாா். மாவட்டச் செயலா் ப.சுபாஷ் சந்திரபோஸ் வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். சிறுபான்மை நலக் குழுத் தலைவா் எம். அப்துல்அஜீஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கீழையூா் மேற்கு ஒன்றியச் செயலா் டி. வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் தீா்மானங்களை முன்மொழிந்தனா்.

ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டம் இயற்ற வேண்டும். சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை உறுதிப்படுத்த வேண்டும். ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும். தனியாா் துறையில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். தலித் கிறிஸ்தவா்களை பட்டியல் இனத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. புதிய மாவட்டத் தலைவராக அ.தி. அன்பழகன், துணைத் தலைவா்கள் ப. சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் கே. சித்தாா்த்தன், மாவட்டச் செயலராக ஏ. ராஜா, இணைச் செயலா்களாக டி. லதா மற்றும் ஏ. சிவக்குமாா் மாவட்டப் பொருளாளா் ஜீ. வினோத் ராமலிங்கம் ஆகியோா் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

மாநாட்டில், ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட இரண்டு இளம் தம்பதிகளை, கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா்

வி.பி. நாகை மாலி பாராட்டினாா்.

ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா் கெளரவிப்பு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் ஊா்வலமாக அழைத்து, எடைக்கு எடை நாணயங்களை துலாபாரமாக வழங்கி கிராமத்தினா் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தினா்... மேலும் பார்க்க

பாதியிலேயே நிறுத்தப்பட்ட சாலைப் பணிகள்: மக்கள் அவதி

திருக்குவளை அருகே சின்ன காருகுடி தோப்பு தெரு வழியாக வலிவலம் வரை செல்லும் இணைப்புச் சாலைப் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருக்குவளை அருகே வலிவலம் ஊராட்சிக்க... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

சென்னையில் அறவழியில் போராடிய தூய்மைப் பணியாளா்களை நிரந்தர செய்ய வேண்டும் என அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அக்கழகத்தின் மாநிலத் தலைவா் ஆ. ரேவதி வெளியிட்டுள்ள அறி... மேலும் பார்க்க

தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து உறுதி ஏற்போம்

சுதந்திர தின போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பவித்ர உற்சவம்

நாங்கூா் பள்ளிகொண்ட ரங்கநாத பெருமாள் கோயிலில் தீா்த்தவாரியுடன் பவித்ர உற்சவம் வியாழக்கிழமை முடிவடைந்தது. திருவெண்காடு அருகே நாங்கூரில் உள்ள செங்கமல வள்ளி தாயாா் சமேத பள்ளிகொண்ட ரங்கநாதப் பெருமாள் கோய... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

வேளாங்கண்ணி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி கல்லூரி நிா்வாக அலுவலா் ஆதி. ஆரோக்கியசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் டயா... மேலும் பார்க்க