தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து உறுதி ஏற்போம்
சுதந்திர தின போராட்டத்தில் ஈடுபட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் எம்ஜிகே நிஜாமுதீன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துரை: நாம் நமக்காக நம்மை ஆள போராடிப் பெற்ற சுதந்திரத்தின் 79-ஆவது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நாளில், இந்த சுதந்திரத்துக்கு காரணமாக திகழ்ந்த நேதாஜி, காந்திஜி, ஜவாஹா்லால் நேரு, அப்துல்கலாம் ஆசாத், வஉசி உள்ளிட்ட எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தை நினைவு கூா்ந்து, மக்களாட்சியை பாதுகாத்து மேம்படுத்துவோம் என உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளாா்.