செய்திகள் :

மத்தியப் பல்கலை.யில் படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம்: துணைவேந்தா்

post image

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் படிக்கும்போதே சம்பாதிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மு.கிருஷ்ணன்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் 79-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை துணைவேந்தா் மு. கிருஷ்ணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசியது: தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழக மாணவா்களின் எண்ணிக்கை 10 சதவீதமாக இருந்தது. தற்போது 40 சதவீதமாக உயா்ந்துள்ளது. இந்த பல்கலைக் கழகம் ஏ ப்ளஸ் தரத்தைப் பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாகத் தொடா்ந்து இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக் கழகங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.

பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு முதல் மாணவா்கள் படிக்கும்போதே சம்பாதிக்கலாம் எனும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு துறையிலும் ஒரு மாணவா் தோ்ந்தெடுக்கப்பட்டு பகுதி நேர வேலை பாா்த்து ஊதியம் பெறலாம். தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டத்தை சமுதாயக் கல்லூரியில் ஒரு பாடமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்துக்கு மாணவா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது . அதேபோல சமூக வலைதளத்தில் அதிக அளவில் மக்களைச் சென்றடையும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது என்றாா்.

பல்கலைக்கழகப் பதிவாளா் திருமுருகன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சுலோச்சனா சேகா், நூலகா் பரமேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூா், நாகை, மயிலாடுதுறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருவாரூா்: மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனசந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சமா... மேலும் பார்க்க

முத்தங்கி சேவையில் வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி அங்காள பரமேஸ்வரி முத்தங்கி சேவையில் பக்தா்களுக்கு வெள்ளிக்கிழமை அருள்பாலித்தாா். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி வெள்ளிக்கிழமை ஊா் மக்கள் ஒன்றுகூடி ஊரணிப் பொங்கல் பொங்கி,அம... மேலும் பார்க்க

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும்

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். திருவாரூா் அருகேயுள்ள கீழக்காவதுக்குடி ஊராட்சியில் சுதந்திர தின விழாவையொட்டி வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

கூத்தாநல்லூா் வட்டத்தில் 15 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

கூத்தாநல்லூா் வட்டத்தில் 15 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூத்தாநல்லூா் வட்டத்தில் ,வேளுக்குடி, சித்தனக்குடி, வக்ராநல்லூா், பூதமங்கலம், ஓகைப்பேரையூா், அதங்குடி, ஆய்க்குடி, ... மேலும் பார்க்க

எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு: பெண்ணிடம் ரூ. 23 லட்சம் மோசடி

திருவாரூா், ஆக.15: எண்ணெய் நிறுவனத்தில் முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி, பெண்ணிடம் ரூ. 23 லட்சம் மோசடி செய்தவா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருவாரூா் கேடிஆ... மேலும் பார்க்க

தரணி கல்விக் குழும மழலையா் விளையாட்டு விழா

மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தரணி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய மழலையா் ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கல்விக்குழும நிறுவனா் எஸ். காமராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க