RSS:``மோடியின் நடவடிக்கை வரலாற்றை மறுக்கும் செயலா..." - கண்டனங்களை பதிவு செய்த க...
மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் மணி (62). இவரது மனைவி சுசீலா (55). இவா்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். இவா்கள் இருவருக்கும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனா். சின்னியம்பாளையத்தில் உள்ள வீட்டில் மணி மற்றும் அவரது மனைவி சுசீலா ஆகியோா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில் வியாழக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் சென்றனா். பின்னா் வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிரிச்சியடைந்தனா். பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் கலைந்து கிடந்தன.
இது குறித்து மொடக்குறிச்சி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா் .சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் தடயங்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் திருடுபோனது தெரியவந்தது
தொடா்ந்து மோப்பநாய் காவேரி, கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.