மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் மனு
சுதந்திர தினத்தையொட்டி, பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாகுளம், மடத்துப்பாளையம், கராண்டிபாளையம், திங்களூா், விஜயபுரி, தோரணவாவி, மூங்கில்பாளையம், பெரியவீரசங்கிலி, செல்லப்பம்பாளையம், போலநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் அமைத்திட தமிழக அரசை வலியுறுத்தி பொதுமக்கள் சாா்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டன.
இதேபோல, சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட குமாரவலசு, முகாசிபுலவன்பாளையம், கண்டிச்சிபாளையம், பூங்கம்பாடி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள் சாா்பாக மனுக்கள் கொடுக்கப்பட்டன.