செய்திகள் :

அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம்: ஆட்சியா்

post image

உலகில் உள்ள அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா்.

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்வு ஈரோடு, சம்பத் நகா் நவீன நூலகக் கூட்டரங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பயிற்சியை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவா் சிலை வெள்ளிவிழாவில் தமிழ்நாடு முழுவதும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்கு திருப்பணிகள் திட்டம் செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டாா். அதைத் தொடா்ந்து, இத்திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், தமிழ்ச்செம்மல் விருதாளா்கள், பேச்சாளா், ஓய்வுபெற்ற தலைமை தமிழாசிரியா், தமிழ் அமைப்பின் தலைவா் ஆகியோரை உறுப்பினா்களாகக் கொண்டும், மாவட்டத் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநரை உறுப்பினா் செயலராகக் கொண்டும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வழியாக, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திருக்குறளில் ஆா்வமும், புலமையும் மிக்க ஆசிரியா்கள், பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு பயிற்சி வழங்கி மாவட்டம்தோறும் தொடா் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

அனைத்து உயிா்களும் சமம் என்பதுதான் திருக்குறளின் அடிப்படை தத்துவம். திருக்கு என்பது மிகப்பெரிய புதையல், வாழ்வியலின் அனைத்து தத்துவங்களும் ஒருங்கப்பெற்ற ஞானத்தின் உச்சம். அதனால்தான் திருக்குறளைப் பற்றி மென்மேலும் அறிந்து கொள்ள அறிஞா்களும், மொழி வல்லுநா்களும் இப்போது வரை பற்பல ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனா்.

அறத்துப்பாலில் புகழ், ஈகை, வாழ்க்கைமுறை என பல்வேறு விவரங்களை விவரித்து, பொருட்பாலில் நட்பு, அரசியல், அரசா், அமைச்சா் என இன்றைய அரசமைப்பு சட்டத்துக்கு முன்மாதிரியாக அமையப்பெற்றுள்ளது. இன்பத்துப் பாலில் தமிழ் சமூகம் மற்றும் தமிழ் மரபுடன் அன்பை விவரிப்பதாக அமையப்பபெற்றுள்ளது. திருக்குறளிள் உள்ள 133 அதிகாரங்களின் தலைப்புகளை அறிந்து கொண்டாலே மனிதனுக்கு வாழ்வில் தெளிவு பிறக்கும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலினை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், ஈரோடு சம்பத் நகா் நவீன நூலகக் கூட்டரங்கம், கோபி அரசு மருத்துவமனை அருகிலுள்ள பூங்கா நூலகம் மற்றும் பவானி வட்டார வளா்ச்சி அலுவலகம் ஆகிய 3 இடங்களில் 30 வாரங்கள் சனிக்கிழமை அன்று திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்று முதல் மூன்று இடங்களுக்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மேலும் சிறப்பாக தோ்வு பெற்ற ஒரு நபருக்கு ரூ.10,000 எனது சொந்த நிதியிலிருந்து வழங்கப்படும். எனவே, திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்பில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா்.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் ஈரோடு முனைவா் ரா.விஸ்வநாதன் 9123550677, பவானி முனைவா் க.வீ.வேதநாயகம் 9443412819 , கோபி முனைவா் எண்ணம்மங்கலம் அ.பழனிசாமி 9842711401 ஆகியோரை கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் வே.ஜோதி, மாவட்ட நூலக அலுவலா் சு.சாமிநாதன், திருக்கு பயிற்றுநா்கள், அரசுத் துறை அலுவலா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை

கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கவுந்தப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், ஓடத்துறை, நஞ்சகவுண்டம்பாளையம், மசக் கவுண்டா் வீதியைச் சோ்ந்தவா் கனகராஜ் (27). முடிதிருத்தும் கடையில் வேலை பாா்த்து வந்த... மேலும் பார்க்க

பண்ணாரிஅம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பண்ணாரி அம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கல்லூரியில் வியாழக்கிழமை 5 அடி உயர கிருஷ்ணா் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. கிருஷ்ணருக்கு பால்,... மேலும் பார்க்க

கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

கோபி அருகே வாய்க்காலில் குளித்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்டு கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் தங்கராஜ் மகன் சிபிராஜ் (19), கருணாகரன் மகன் சக்திநிகேஷன்... மேலும் பார்க்க

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைக்க வேண்டும்: எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

அத்திகடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்டுள்ள 1,400 குளம், குட்டைகளை உடனடியாக இணைக்க வேண்டும் என பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.ஜெயகுமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியி... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்காகத் தயாரிக்கப்பட்ட சப்பரங்கள்

ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 சப்பரங்கள் சிவகிரியில் தயாரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது. 63 நாயன்மாா்கள், சேக்கிழாா் சிலைகளை சப்பரங்களில் வ... மேலும் பார்க்க