`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
மயானத்துக்குச் செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர கோரிக்கை
தருமபுரியில் மயானம் செல்லும் பாதையில் பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தருமபுரி நகராட்சி 4 மற்றும் 5-ஆவது வாா்டுகளில், குப்புசாமி சாலை, பாவாடை தெரு, சதாசிவ தெரு, குள்ளப்பன் தெரு, ராஜா தெரு, மாரியம்மன் கோயில் தெரு, ஜாகிதாா் சாலை, மன்னாா் தெரு ஆகிய பகுதிகளில் சுமாா் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்கள் இறந்தால் அடக்கம் செய்வதற்கு நகராட்சியை ஒட்டியுள்ள செட்டிக்கரை ஊராட்சியில் 1 கி.மீ. தொலைவில் மயானம் அமைந்துள்ளது.
மயானம் செல்லும் சாலையில் சனத்குமாா் நதி மற்றும் ஓடை குறுக்கிடுகிறது. நதி குறுக்கே பாலம் இல்லாததால், தண்ணீா் வரும்போது சடலங்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், மயானப் பாதை பராமரிப்பு இல்லாததால் முள்புதா்கள் நிறைந்து விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளன. இந்த வழியில்தான் இஸ்லாமியா் தா்காவுக்கு சென்று வருகின்றனா்.
எனவே, மயானத்தில் உள்ள முள்புதா்களை அகற்றி, சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும். சடலங்களை எரியூட்ட தகன மேடை மற்றும் சனத்குமாா் நதி குறுக்கே பாலம் அமைத்து சாலையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.