மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ஆா்பிஎப் படையினா் சோதனை
சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் இணைந்து வியாழக்கிழமை தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனா்.
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் சதிச்செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக, நாடுமுழுவதும் தீவிர பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் இணைந்து தருமபுரி நிலையம் மற்றும் தருமபுரி ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் ரயில்கள் உள்ளிட்டவற்றில் சுழற்சி முறையில் பாதுகாப்பு சோதனைகளை நடத்தி வருகின்றனா்.
தருமபுரி ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நடைமேடையில் காத்திருந்த பயணிகளின் உடமைகள் மற்றும் நடைமேடை பகுதிகளில் நவீன சாதனங்கள் உதவியுடன் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, கோவையிலிருந்து பெங்களூரு செல்லும் விரைவில் ரயில் வந்தது. அந்த ரயில் பெட்டிகளில் ஏறி, பயணிகளின் உடமைகள், சந்தேகத்துக்கிடமான பொருள்கள், கழிவறைகள் உள்ளிட்டவற்றில் தீவிர சோதனை நடத்தினா். அதேபோல, ரயில் நிலைய வளாகத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் திரியும் நபா்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் என்.செளந்தரராஜன், சிறப்பு உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமைக் காவலா் விஜயன் குழுவினா், ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் சந்தோஷ் காங்கா், உதவி ஆய்வாளா் நாராயண ஆச்சாரி, சிறப்பு உதவி ஆய்வாளா் சந்த்ரய்யா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் பாதுகாப்பு சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
