2025 இறுதிக்குள் உள்நாட்டில் தயாரித்த முதல் செமிகண்டக்டர் சிப் அறிமுகம்: பிரதமர்...
ரயில்வே பாதுகாப்பு படையினா் விழிப்புணா்வுப் பேரணி
தூய்மை பாரத திட்டத்தை வலியுறுத்தி, தருமபுரியில் ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே சாா்பில், ரயில்வே பாதுகாப்பு படையினா் தருமபுரி ரயில் நிலையப் பகுதியில், தூய்மை இந்தியா (ஸ்வச்பாரத்) திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களை வலியுறுத்தி வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி மேற்கொண்டனா்.
இதில், ரயில் நிலையம், குடியிருப்பு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், நகரத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், சாலைகள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் இடம்பெற்ற விளம்பரத் தட்டி, தேசியக் கொடிகளை ஏந்தி பேரணி சென்றனா்.
இந்நிகழ்வுக்கு, தருமபுரி ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் சந்தோஷ் காங்கா் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் நாராயணா ஆச்சாா்யா, சிறப்பு உதவி ஆய்வாளா் சந்த்ரய்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.