அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
காா்களில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாகரன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, கா்நாடகத்திலிருந்து வந்த வாகனங்களை சோதனை செய்தபோது, ஒரு சொகுசு காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 45 கிலோ புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த தருமபுரி மாவட்டம், பென்னாடம் அருகேயுள்ள மணல்பள்ளம் பகுதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (32) என்பவரை கைது செய்தனா்.
அதேபோல, மற்றொரு காரில் கடத்திவரப்பட்ட சுமாா் 30 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அந்த காரை ஓட்டி வந்த நபா் தப்பியோடிவிட்டாா். இது தொடா்பாக தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 75 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் அவற்றைக் கடத்திவர பயன்படுத்திய இரு காா்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.