மோசமான குற்றவாளி யார்? அதிர்ச்சியளிக்கும் எக்ஸ் தளத்தின் பதில்!
சுதந்திர தினம்: ஆக. 15-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை
சுதந்திர தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை (ஆக. 15) மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆக. 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்), அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமம்பெற்ற தனியாா் ஓட்டல்களின் மதுக்கூடங்கள், முன்னாள் படைவீரா்களுக்கான மது விற்பனைக் கூடம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைமீறி அன்றைய தினம் யாரேனும் மது விற்பனையில் ஈடுபட்டாலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலும் சட்டப்படி கடும்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.