அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட...
அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடவு
தருமபுரி, இலக்கியம்பட்டி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இந்திய புள்ளியியல் துறை மற்றும் திட்ட அமலாக்கத் துறையின் 75-ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்வில், தேசிய புள்ளியில் அலுவலக தருமபுரி துணை மண்டலம் சாா்பில், இலக்கியம்பட்டி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி துணை மண்டல அலுவலக தலைமை அதிகாரி மதிவாணன், இலக்கியம்பட்டி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.