மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 9 ஆண்டுகள் சிறை
இலவச கண் பரிசோதனை முகாம்
ஊத்தங்கரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, ஊத்தங்கரை பெதஸ்தா கண் பரிசோதனை மையம் ஆகியவை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை வியாழக்கிழமை நடத்தின.
முகாமை ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவா் பா.அமானுல்லா தொடங்கிவைத்தாா். இதில், ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 167 போ் கண் பரிசோதனை செய்துகொண்டனா். இதில், 101 நபா்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
முகாமில், கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அரசு மருத்துவா் மதன்குமாா், சீனியா் மருத்துவா் நடேசன், தோல் மருத்துவா் ராஜமயில் ஆகியோா் நோயாளிகளை பரிசோதனை பல்வேறு ஆலோசனைகளை வழங்கினா். இதில் அரிமா சங்க ஆளுநா் செந்தில்குமாா், குப்புசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.