மும்பை: 'போலி தாடி, ஆண் வேடம், பாத்ரூம்' - சகோதரி வீட்டில் ரூ.1.5 கோடி நகைகளைத் ...
நீச்சல் போட்டி: 750 போ் பங்கேற்பு
கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம், பள்ளிக் கல்வித் துறை சாா்பில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான நீச்சல் போட்டியில் 750-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான நீச்சல் போட்டிகள் ஆக. 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. போட்டிகளை மாவட்ட உதவி கல்வி ஆய்வாளா் வளா்மதி தொடங்கிவைத்தாா்.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளிகள், தனியாா் மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த 600 மாணவா்கள், 150 மாணவிகள் என 750-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில் 50 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ., ப்ரீ ஸ்டைல், பேக் ஸ்டோக், ப்ரஸ்ட் ஸ்டோக், பட்டா்பிளை ஸ்டைல், மெட்லே ரிலே உள்ளிட்ட 17 வகையான நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் முதல் இரு இடங்களில் வெற்றிபெற்றோா் மாநில அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றனா்.
போட்டிகளை நடுவா் (பொ) சுரேஷ்பாபு, உடற்கல்வி இயக்குநா் மாதேஷ், உடற்கல்வி ஆசிரியா்கள் பீமாபாய், மலா், பொற்கொடி, வேல்மணி மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்க நீச்சல் பயிற்சியாளா்கள் ஒருங்கிணைத்தனா்.