`ஏங்க... திருநெல்வேலி வந்தா இங்கெல்லாம் வந்துட்டு போங்கங்க.!’ நெல்லையில் 5 பெஸ்ட...
அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ஒசூா் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் (பொ) பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்தாா். இதில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவதன் நோக்கம், கிருஷ்ணா் வரலாறு குறித்து கூறப்பட்டது.
நிகழ்ச்சியில், துறைத் தலைவா்கள் புவியரசு, நாகராஜன், சரளா, நான்சி மேரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாணவா்களுக்கு பிரசாதமாக கேசரி, அவல், பொங்கல், சுண்டல் ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை ஆசிரியா்கள் விஜயலக்ஷ்மி, ஜஸ்டினா, சுந்தரம் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா். இதில், 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.