விநாயகர் சதுர்த்தி: சாணியில் செதுக்கிய விநாயகர் சிலைகள்; நிலக்கோட்டை பெண்ணின் பு...
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடி ஏற்றம்!
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் தீட்சிதர்களால் வெள்ளிக்கிழமை தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
நாடு முழுவதும் 79 ஆவது சுதந்திர நாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் பொதுதீட்சிதர்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர்.
பின்னர், மேளதாளத்துடன் கோயில் செயலர் த. சிவசுந்தர தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் தேசியக் கொடியை எடுத்து வந்து கிழக்கு கோபுரத்தின் உச்சியில் ஏற்றி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினர்.