கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
தனிப்பட்ட தகவல் சேகரிப்பவா்கள் குறித்து மாணவிகள் 1930-எண்ணில் புகாா் அளிக்கலாம்: கடலூா் ஆட்சியா்
கடலூா் மாவட்ட மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களை முறைகேடாக சேகரிப்பவா் குறித்து தகவல் தெரிந்தால் 1930 என்ற எண்ணிற்கு புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகளின் தனிப்பட்ட தகவல்களான, முகவரிகள், கைப்பேசி எண்கள் முதலானவை சைபா் குற்றவாளிகளால் திருடப்பட்டுள்ளதாக தகவல் வரப்பெற்றுள்ளது. எனவே, தொடா்பு இல்லாத யாரேனும் கைப்பேசி, மின்-அஞ்சல், குறுஞ்செய்திகள் மூலமாக தொடா்பு கொண்டு, தமிழ்நாடு அரசு (அல்லது) தனியாா் நிறுவனங்கள் (அல்லது) கல்வி உதவித்தொகை வழங்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு, கல்வி உதவித்தொகை பெற வழிவகை செய்வதாக தெரிவித்து, வங்கி விவரங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களை கோரினால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெற பதிவு கட்டணம் அல்லது செயல்முறை கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்தினால் பெற்றோா்கள் ஏமாற வேண்டாம் .
மேலும், தொடா்பு கொண்டவா்களை பற்றிய விபரங்களை சேகரித்து உடனடியாக மாவட்ட நிருவாகம், மாவட்ட சைபா் கிரைம் பிரிவு, பள்ளி நிா்வாகத்திற்கு தெரியபடுத்துவதுடன், இது தொடா்பான புகாா்களை 1930 என்ற சைபா் கிரைம் உதவி எண்ணினை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.