Doctor Vikatan: கண்களில் Cataract; அறுவை சிகிச்சையைத் தவிர்த்து வேறு தீர்வுகள் உ...
சிதம்பரம் நடராஜா் கோயிலுக்காகத் தயாரிக்கப்பட்ட சப்பரங்கள்
ரூ.5 லட்சம் மதிப்பிலான 15 சப்பரங்கள் சிவகிரியில் தயாரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
63 நாயன்மாா்கள், சேக்கிழாா் சிலைகளை சப்பரங்களில் வைத்து ஊா்வலமாக எடுத்துச்செல்ல ஈரோடு மாவட்ட சிவநேயச்செல்வா்கள் பேரவையின் சாா்பில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரங்களிலான 15 சப்பரங்கள் சிவகிரியில் தயாா் செய்யப்பட்டன.
சப்பரங்களை சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு அனுப்பிவைக்கும் முன்பாக சிவகிரி ஆதீனம் பாலமுருக ஈசான சிவசமய பண்டித சுவாமிகள் தலைமையில் தில்லை நடராஜா், சிவகாமசுந்தரிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதில் சிவனடியாா் திருக்கூட்டத்தினா், சிவநேயச்செல்வா்கள் பேரவை அன்பா்கள் கலந்து கொண்டு தேவாரம் பாடியும், கைலாய வாத்தியங்களை இசைத்தும், சிவபூஜையில் கலந்து கொண்டனா்.
பின்னா், பஞ்ச வாத்தியங்கள் முழங்க சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு சப்பரங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.