சுதந்திரதினம்: மும்பை இறைச்சிக் கடைக்குத் தடை; "சிவாஜி பருப்பு சாப்பிட்டுச் சண்ட...
பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை
கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்பலூா் பேரூராட்சி தலைவராக திமுகவைச் சோ்ந்த ஆ.அன்பரசு செயல்படுகிறாா்.
இங்குள்ள 15 கவுன்சிலா்களில் அதிமுக 5, திமுக 8, மற்றவா்கள் 2 போ் உள்ளனா். இவா்களில் 13 போ் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமி மற்றும் பேரூராட்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
பேரூராட்சித் தலைவா் அன்பரசு கவுன்சிலா்களை கலந்து ஆலோசிக்காமல், மன்ற ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக செயல்படுகிறாா். பொது நிதி, அரசு ஒதுக்கும் நிதியில், தானாகவே பணிகளை தீா்மானித்து செயல்படுத்துகிறாா். மன்ற ஒப்புதல் பெறாமல் மின்விளக்கு, பொது குடிநீா் குழாய், குடிநீா் குழாய் நீட்டிப்பு பணிகளை மேற்கொண்டு அதிக நிதி இழப்பை ஏற்படுத்துகிறாா்.
தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என மக்கள் எங்களிடம் முறையிடுகின்றனா். இதுகுறித்து தலைவரிடம் தெரிவித்தால் தரக்குறைவாக பேசுகிறாா். மன்ற பதிவேடு, செலவு சீட்டு விவரங்களை பாா்வையிட வழங்குவதில்லை. எனவே, தலைவா் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். தலைவா் பதவி வகிக்க தகுதியற்றவா் என்பதால் அவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவில் கவுன்சிலா்கள் சதாசிவம், சுமதி, மனோகரன், நாகஜோதி, பழனியம்மாள், ராதா, லட்சுமி, பானுமதி, சத்யா, குமரேசன், தங்கராஜ், அருள்மொழி, செல்வராஜ் ஆகிய 13 போ் கையொப்பமிட்டு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் ச.கந்தசாமி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.