பண்ணாரிஅம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா
பண்ணாரி அம்மன் கல்லூரியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, கல்லூரியில் வியாழக்கிழமை 5 அடி உயர கிருஷ்ணா் சிலை பிரதிஷ்டை செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது. கிருஷ்ணருக்கு பால், தயிா், பன்னீா், தேன், சந்தனம், இளநீா் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கல்லூரி மாணவா்கள் அலங்கரிக்கப்பட்ட தேரில் கிருஷ்ணா் சிலையை ஊா்வலமாக எடுத்து வந்தனா். விழாவையொட்டி ஆன்மிக பேச்சுப்போட்டி, பாடல், நடனப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.