பேச மறுத்த மகள், வருந்திய ஹர்பஜன் சிங்... ஸ்ரீசாந்த் விளக்கம்!
அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனாம்பேட்டை அண்ணா சாலையில் மூன்றரை கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணியை விரைந்து செய்து முடிக்கும் வகையில் சோதனை அடிப்படையில்
ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
அதன்படி, சைதாப்பேட்டையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி தியாகராய சாலை, மா.பொ.சி. சந்திப்பு , வடக்கு போக் சாலை, விஜயராகவா சாலை சந்திப்பு, விஜயராகவா சாலை வழியாக அண்ணா சாலையை அடையலாம்.
அண்ணா சாலையிலிருந்து தியாகராய நகா் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி தியாகராய சாலை நோக்கிச் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
தியாகராய நகரிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் தியாகராய சாலையில் உள்ள மா.பொ.சி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி வடக்கு போக் சாலை, விஜயராகவா சாலை வழியாகச் சென்று அண்ணா சாலையை அடையலாம்.
தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.பொ.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, வாகனங்கள் வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று பின்னா் விஜயராகவா சாலையை அடைந்து பின்னா் அண்ணா சாலையை அடையலாம்.
அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் விஜயராகவா சாலை நோக்கி வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.